செய்திகள்

சூர்யா தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய்யின் மகன்

சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவையும்...

DIN

சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய்.

சூர்யாவின் 2டி நிறுவனம் குழந்தைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய், நடிகராக அறிமுகமாகிறார். இயக்கம் - சரோவ் சண்முகம், ஒளிப்பதிவு - கோபிநாத், இசை - நிவாஸ் கே. பிரசன்னா.

சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவையும் அவர்களுக்கிடையேயான அன்பையும் உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக படம் இருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் மொத்தக் கதையின் ஊட்டியில் நடைபெறுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

தனது மகன் நடிகராக அறிமுகமாவது குறித்து அருண் விஜய், ட்விட்டரில் கூறியதாவது:

சூர்யாவின் தயாரிப்பில் என் மகன் நடிகராக அறிமுகமாவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் நடிப்பைத் தொடர்வது நல்ல உணர்வைத் தருகிறது. இதை விட ஒரு நல்ல தொடக்கம் இருக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT