செய்திகள்

அந்தாதுன் தமிழ் ரீமேக்: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர்

DIN

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. 

அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ், சித்தார்த் போன்ற நடிகர்கள் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ‘நடிகர் பிரசாந்த் டிரினிடி காலேஜ் ஆஃப் லண்டனில் பியானோவின் நான்காவது கிரேடு தேர்வை வென்றுள்ளார். வீட்டிலும் அவர் பியானோவைத் தினமும் வாசிப்பார். எனவே பியானோ கலைஞர் வேடத்துக்கு பிரசாந்த் பொருத்தமாக இருப்பார்’ என தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். இப்படத்துக்காக பியானோ பயிற்சியில் ஈடுபட்டு வரும் பிரசாந்த் தனது எடையை 20 கிலோவுக்கு அதிகமாக குறைத்துள்ளதாகத் தெரிகிறது. 

அந்தாதுன் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். தபு வேடத்துக்கு ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க தியாகராஜன் அணுகியதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

ஜனவரி முதல் அந்தாதுன் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT