முகப்பு
செய்திகள்

நெட்பிளிக்ஸ்: அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ்!

அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக...

செய்திகள்

நெட்பிளிக்ஸ்: அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ்!

அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தமிழ்ப் படங்களைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் அவ்வப்போது நடிக்க முயற்சி செய்யும் நடிகர் தனுஷ், அடுத்ததாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், 

சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர்களான ருஸோ பிரதர்ஸ் (அந்தோனி ருஸோ, ஜோசப் ருஸோ) அடுத்ததாக தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்தை இயக்குகிறார்கள். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவரவுள்ளது.

2021-ல் படப்பிடிப்பு ஆரம்பமாகி, 2022 தொடக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் ரையன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. 

நெட்பிளிக்ஸில் வெளியாகும் தி கிரே மேன் படத்தில் நானும் இணைகிறேன். இந்த ஆக்‌ஷன் படத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். என்மீது அன்பு செலுத்தும் ரசிகர்களுக்கு நன்றி என ட்விட்டரில் தனுஷ் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →