செய்திகள்

மாஸ்டர் படத்தின் சிட்டி ஸ்டோரி பாடல் வெளியானது

தமிழில் இப்பாடல் குட்டி ஸ்டாரி என வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. 

DIN

தெலுங்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள சிட்டி ஸ்டோரி பாடலின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேடர்ஸ் தகவல் தெரிவித்தது.

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகச் சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்தது. படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட புகழ்பெற்ற ஓடிடி நிறுவனங்கள் எங்களை அணுகின. ஆனால், நாங்கள் திரையரங்குகளில் வெளியிடுவதையே விரும்புகிறோம். தற்போது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து திரைத்துறை மீண்டு வருவதற்கான நேரம் இது. திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுடனும், தமிழ் திரைத் துறை மீண்டு வருவதற்கும் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களிடம் வருவோம் என்று எதிர்பார்க்கிறோம் என படக்குழு அறிக்கை வெளியிட்டது.

தெலுங்கிலும் மாஸ்டர் படம் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் இடம்பெற்றுள்ள சிட்டி ஸ்டோரி பாடல், விடியோவுடன் இன்று வெளியாகியுள்ளது. அனிருத், சாம் விஷால் பாடியுள்ளார்கள். தமிழில் இப்பாடல் குட்டி ஸ்டாரி என வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. 

ஜனவரி 13 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT