கரோனாவிலிருந்து மீண்டார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
2021-ம் வருடத்தை நல்ல உடல்நலத்துடன் நேர்மறை எண்ணங்களுடன் தொடங்க ஆர்வமாக உள்ளேன்.
தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், கரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட ரகுல் ப்ரீத் சிங், தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
எனக்கு கரோனா இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நான் தற்போது நலமாக உள்ளேன். அனைவருடைய வாழ்த்துகள், அன்புக்கு நன்றி. 2021-ம் வருடத்தை நல்ல உடல்நலத்துடன் நேர்மறை எண்ணங்களுடன் தொடங்க ஆர்வமாக உள்ளேன். அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். முகக்கவசம் அணிந்து, எல்லாவிதமான முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்போம் என்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.