முகப்பு
செய்திகள்

கடற்கரையில் விடுமுறையைக் கொண்டாடும் தீபிகா படுகோன்

நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தற்போது கடற்கரையில் தங்கள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:46 PM
பகிர்:

நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தற்போது கடற்கரையில் தங்கள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.

தீபிகா தனது விடுமுறையின் கொண்டாட்டக் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் இன்று பதிவிட்டிருந்தார். அதில், கடற்கரையில் இரண்டு ஜோடி செருப்புகளைக் காணலாம்.

"எனக்கு வழியைக் காண்பிக்கும் உங்கள் மீது எப்போதும் சாய்ந்திருப்பேன்" என்று அந்தப்படத்துக்குத் தலைப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீபிகா கணவர் ரன்வீரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, விடுமுறைக்குக் கிளம்புவதாகத் தெரிவித்தார். ஆனால், இருவரும் விடுமுறையை எங்கே கழிக்கவிருக்கிறார்கள் என்று பகிர்ந்து கொள்ளவில்லை. 

தீபிகாவும் ரன்வீரும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர் கபீர் கானின் "83" படத்தில் நடிக்கிறார்கள். இந்தியாவின் கிரிக்கெட்  வரலாற்று வெற்றியான 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

"83" படத்தை மது மந்தேனா, சஜித் நதியாட்வாலா மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.