செய்திகள்

23 வயதில் மரணமடைந்த இயக்குநர் ராஜ் கபூரின் மகன்

தனது தாயுடன் மெக்காவுக்குச் சென்றபோது ஷாருக் கபூருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு..

DIN

இயக்குநர் ராஜ் கபூரின் மகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 23.

தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமான ராஜ் கபூர் - அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் போன்ற படங்களை இயக்கியதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 

ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்கிற மனைவியும் ஷாருக் கபூர் என்கிற மகனும் ஷமீமா கபூர், ஷானியா கபூர் என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். 23 வயதான ஷாருக் கபூருக்குக் கடந்த வருடம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குணமான பிறகு மெக்காவுக்குப் புனிதப் பயணம் செல்ல திட்டமிட்டது ராஜ் கபூரின் குடும்பம். 

இந்நிலையில் தனது தாயுடன் மெக்காவுக்குச் சென்றபோது ஷாருக் கபூருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இயக்குநர் ராஜ் கபூரின் மகன் இளம் வயதிலேயே மரணமடைந்தது தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT