செய்திகள்

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகல்?

DIN


2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறியுள்ளதாகவும் இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே தொடர்ந்து இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. 

எனினும் இந்தச் செய்தி குறித்த அதிகாரபூர்வமான தகவல் விஷாலிடமிருந்தோ மிஷ்கின்னிடமிருந்தோ இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT