செய்திகள்

அதிகாரத்துக்கு மண்டியிடாத ஒரு அசலான கலைஞனின் தேடல்: ஞானச்செருக்கு

உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக் கொண்டிருக்கும் ஞானச்செருக்கு.

உமா ஷக்தி.

உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக் கொண்டிருக்கும் படம் ஞானச்செருக்கு. மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். யாரிடமும் உதவி இயக்குனராய் பணி புரியாமல், திரைக்கலையைத் தானாகவே கற்றுக் கொண்டு, சுயாதீனப் படமாக ஞானச்செருக்கை உருவாக்கியுள்ளார் தரணி ராஜேந்திரன்.

நான்கு வருடக் கடும் உழைப்பில் இந்தப் படத்தை உருவாக்கியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இத்திரைப்படம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை 7 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது, மேலும் 19 விருதிற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இயக்குநர் பா.ரஞ்சித்  ஞானச்செருக்கு படத்தின் முதல் பார்வையை அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

இந்தப் படத்தைப் பற்றி ரஞ்சித் கூறுகையில், ‘இன்றைய தமிழ்ச் சூழலில் ஞானச்செருக்கு மிகவும் முக்கியமான படைப்பாக அமையும். தோழர் தங்கள் வட்டத்தில் பகிருங்கள்.குழுவிற்கு துணை நில்லுங்கள்.நன்றி. என்றார்’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய நீதிக் கட்சி நிா்வாகி நியமனம்

மகளிா் திட்ட செயல்பாடுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

‘வால்வோ’ சொகுசு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி: அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆய்வு

சுதேசிக்கு முன்னுரிமை: ‘ஜோஹோ’ மின்னஞ்சலுக்கு மாறினாா் அமித் ஷா

கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT