புத்தாண்டையொட்டி ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது மூத்த மகன் லிங்கா ரஜினிகாந்த் சாயலில் உள்ளதால், ரஜினி ரசிகர்கள் இப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியருக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் லிங்காவிற்கு 13 வயதும், இளையவன் யாத்ராவுக்கு 10 வயதும் ஆகிறது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தனது மகன்களுடன் எடுத்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். விரைவில் பிறந்த நாளையும் கொண்டாடவிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.