செய்திகள்

ஏழை மாணவியின் பேச்சைக் கேட்டு மேடையிலேயே கண் கலங்கிய சூர்யா: ரசிகர்கள் பாராட்டு! (விடியோ)

எழில்

சென்னையில் பேராசிரியா் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவா்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான ’உலகம் பிறந்தது நமக்காக’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகரம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டாா். 

இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை மூலம் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் மிகவும் நெகிழும் விதத்தில் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை உதவியது குறித்தும் பேசினார். இந்தப் பேச்சைக் கேட்ட சூர்யா மேடையிலேயே கண் கலங்கினார்.  பிறகு மாணவிக்குத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

அமைச்சர் முன்னிலையில் மாணவியின் பேச்சைக் கேட்டு சூர்யா கண்கலங்கியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் சூர்யாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT