செய்திகள்

அதீதக் கோபக்காரராகவே தோன்றும் அர்ஜுன் ரெட்டி நடிகர்!

DIN

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகிவரும் வொர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டீஸர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.  கிரந்தி மாதவ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இஸபெல் லைட், கேத்தரின் தரேசா, ராஷி கன்னா உள்ளிட்ட நான்கு பெண் கதாபாத்திரங்கள் உள்ளனர். இந்தப் படத்தின் டைட்டிலும் சரி டீஸரும் சரி இதுவொரு காதல் படம் என்பதை தெளிவாக்கிவிட்டது. விஜய் தேவரகொண்டா இதில் நான்கு வெவ்வேறு கெட்டப்புக்களில் தோன்றுகிறார்.

ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த டீஸரில், விஜய் தேவரகொண்டா  ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாகவும்,  தனது காதலியை விட்டுச் செல்லும் கோபக்கார இளைஞனாகவும்,  அமைதியான கணவராகவும் தோன்றுகிறார்.

அர்ஜுன் ரெட்டியில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.  இந்த டீஸரில் ஐஸ்வர்யா ராஜேஷ் அமைதியான ஒரு இல்லத்தரசி வேடத்தில் நடிக்கிறார் என்று தெரிகிறது.

போலவே இஸபெல் லைட் டீஸரில், பைலட்டாகக் காணப்படுகிறார். இந்தப் படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜெயகிருஷ்ணா கும்மாடி  ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனத்தின் கீழ் கே.ஏ. வல்லபாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார், இவர் விஜய்யுடன் கீதா கோவிந்தம் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்துக்குப் பின், பூரி ஜகந்நாத் இயக்கும் ஃபைட்டர் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் குறித்த தகவல்கள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேலும் இதன் படப்பிடிப்பு இந்த (ஜனவரி) மாதம் தொடங்கவிருக்கிறது. விமரிசனரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் படமான கக்கா முட்டையின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலையுடன் ஹீரோ என்ற ஸ்பொர்ட்ஸ் படத்திலும் விஜய் தேவரகொண்டா கையெழுத்திட்டுள்ளார். மித்ரி மூவி தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய் தொழில்முறை பைக்கராக நடிக்கிறார்.

பாரத் கம்மா இயக்கத்தில் விஜய்யின் டியர் காம்ரேட் படம்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. இதனை அடுத்து வொர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT