செய்திகள்

தெலுங்கில் உருவாகும் அசுரன்: போஸ்டர்கள் வெளியீடு!

தனுஷ் வேடத்தில் நடிக்கும் வெங்கடேஷின் கதாபாத்திரம் தொடர்புடைய போஸ்டர்கள்.. 

எழில்

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அசுரன் படம் தெலுங்கில்  ரீமேக் ஆகிறது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்குகிறார். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இது அவருடைய 74-வது படம். தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் நரப்பா என்கிற பெயரில் உருவாகி வருகிறது. தனுஷ் வேடத்தில் நடிக்கும் வெங்கடேஷின் கதாபாத்திரம் தொடர்புடைய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT