செய்திகள்

எங்கள் வாழ்க்கையை மாற்றிய ரசிகர்கள்: சசிகுமார் நெகிழ்ச்சி

DIN

சுப்ரமணியபுரம் படம் வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. இதையடுத்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் படம் பற்றிய தங்களது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு போன்றோர் நடித்த சுப்ரமணியபுரம் படத்தை சசிகுமார் இயக்கியிருந்தார். இது அவர் இயக்கிய முதல் படம். இசை - ஜேம்ஸ் வசந்தன். ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர். 

இயக்குநர் சசிகுமார் ட்விட்டரில் சுப்ரமணியபுரம் படம் பற்றி கூறியதாவது:

ஜூலை 4 - 12 வருடங்களுக்கு முன்பு, இந்த நாளை எப்படி மறக்க முடியும்? கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் உள்ள அனைவரும் படம் பற்றிய ரசிகர்களின் தீர்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருந்ததை?

சுப்ரமணியபுரம் - இந்தப் படத்துக்கு ரசிகர்கள் காண்பித்த அன்புக்காக எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இதனால் எங்கள் வாழ்க்கையே மாறிப்போனது என்று கூறியுள்ளார்.

சச்சி இயக்கிய அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதைச் சமீபத்தில் உறுதி செய்தார் சசிகுமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT