முகப்பு
செய்திகள்

சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டரை வெளியிட்ட 115 பிரபலங்கள்

சூர்யாவின் பிறந்த நாளைப் பெரிய அளவில் கொண்டாட முயற்சி எடுத்து வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

ஜூலை 23 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சூர்யா.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் அருவா மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என இரு படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளைப் பெரிய அளவில் கொண்டாட முயற்சி எடுத்து வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள். இதன் முதற்கட்டமாக சூர்யா பிறந்த நாளுக்கான போஸ்டரை சமூகவலைத்தளங்களில் கார்த்தி, சிம்ரன், ஆர்யா, அதிதி ராவ், தமன்னா, மாதவன் உள்ளிட்ட 115 பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த முயற்சியினால் அந்த போஸ்டருக்கு நல்ல கவனம் கிடைத்துள்ளது.

மேலும் ட்விட்டரில் #SuriyaBirthdayFestCDP என்ற ஹேஷ்டேக், 24 மணி நேரத்தில் 70 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டதாகவும், ஓர் இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டருக்கு இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளது இதுவே முதல்முறை என்றும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →