செய்திகள்

மகன் கண் முன்னே நீரில் மூழ்கினார்: ஏரியில் நடிகை நயா ரிவேராவின் சடலம் மீட்பு

DIN

ஏரியில் மகனுடன் படகில் சென்ற ஹாலிவுட் நடிகை, நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியா உள்ள பிரு ஏரியில் கடந்த வாரம் புதன் அன்று மதியம் 1 மணிக்கு தனது 4 வயது மகனுடன் படகில் சென்றுள்ளார் 33 வயது ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு படகில் சென்ற ஒருவர், ரிவேராவின் நான்கு வயது மகன் மட்டும் படகில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு நான்கு வயது சிறுவன் மீட்கப்பட்டார். பிறகுதான் படகில் சென்ற நயா ரிவேரா காணாமல் போனது தெரிய வந்தது. 

ஆரம்பத்தில் ரிவேராவைக் காப்பாற்ற முயன்றார்கள் காவல்துறையினர். ஆனால் 24 மணி நேரம் ஆன பிறகும் கிடைக்காததால் நீரில் மூழ்கி ரிவேரா இறந்திருக்கலாம் எனச் சந்தேகித்தார்கள். இதன்பிறகு ரிவேராவின் உடலை மீட்டுக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியில் ஹெலிகாப்டர், படகுகளுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டார்கள். 

இந்நிலையில் நடிகை நயா ரிவேராவின் உடல் ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியோ அல்லது நயாவைக் கொல்வதற்கான முயற்சியோ எதுவும் நடைபெறவில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏரியில் திடீரென நயா ரிவேரா மூழ்கியிருக்கலாம் என்று அறியப்படுகிறது. மகனுடன் நீரில் தத்தளித்த நயா ரிவேரா, கடைசியில் தனது மகனைக் காப்பாற்றிவிட்டு நீரில் மூழ்கியுள்ளார். படகில் இருந்து பார்த்தபோது தனது தாய் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததாக நான்கு வயது மகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். நயா ரிவேராவின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

கிளீ என்கிற தொடரின் மூலமாக அதிகப் புகழை அடைந்தார் நயா ரிவேரா. 2002 முதல் ஆறு படங்களில் நடித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT