முகப்பு
செய்திகள்

மீண்டும் இணையும் தியாகராஜன் குமாரராஜா & பஹத் பாசில்

தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படத்தில் பஹத் பாசில் நடிக்கவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியானது. விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்தார்கள்.

இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படத்தில் பஹத் பாசில் நடிக்கவுள்ளார். இத்தகவலை தெரிவித்துள்ள பஹத் பாசில் மேலும் கூறியதாவது: 

தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் அவர் எப்போது படப்பிடிப்பைத் தொடங்குவார் எனத் தெரியாது. சூப்பர் டீலக்ஸுக்கு முன்பே இருவரும் மலையாளப் படமொன்றில் இணைவதாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி சரியாக அமையவில்லை என்று கூறியுள்ளார். 

கரோனா ஊரடங்குக்கு முன்பு வெளியானது பஹத் பாசில் நடித்த டிரான்ஸ் படம். இதன்பிறகு அமேசான் தளத்தில் வெளியாகி அதிகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →