செய்திகள்

ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகும் வெங்கட் பிரபு படம்

DIN

வைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படம் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

இந்நிலையில் வைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படம் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

யோகி பாபு நடித்த காக்டெயில் படம் சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியானது. லாக்கப் படம் மட்டுமல்லாமல் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படமும் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT