செய்திகள்

ட்விட்டருக்கு மீண்டும் திரும்பினார் நடிகை வனிதா விஜயகுமார்

சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரிலிருந்து விலகிய நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.

DIN

சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரிலிருந்து விலகிய நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா். 

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்ட சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்தார். வனிதா மீது சூர்யா தேவியும் புகார் அளித்தார்.

இதற்குப் பிறகு வனிதாவை விமரிசித்து வந்தார் சூர்யா தேவி. இதையடுத்து சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல்துறையினர் கைது செய்தார்கள். பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான சூர்யா தேவி ஜாமீனில் பிறகு விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரிலிருந்து விலகிய நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் அதில் கூறியதாவது:

இனிமேல் திருமணம் சர்ச்சை குறித்து எதுவும் பேசமாட்டேன். விவாகரத்து பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம். குறைகுடம் தான் சத்தம் எழுப்பும். இந்த விவகாரத்தில் தொடர்பில்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் அமைதியாக இருக்கப் போகிறோம். அவர்கள் பேசுவதை காதில் வாங்கப் போவதில்லை. எங்களைப் புரிந்துகொண்டு அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT