செய்திகள்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள அட்லி படம்!

DIN

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக வெளியிடும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்தகாரம் என்கிற படத்தை அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ளார். இசை - பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். முழுப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.

அந்தகாரம் படத்தைப் பார்த்த விஜய்யின் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டி ட்வீட் வெளியிட்டார். அவர் கூறியதாவது:

அந்தகாரம் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபகாலமாக இதுபோன்ற அட்டகாசமான படமொன்றைப் பார்க்கவில்லை. விக்னராஜன், உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன் அருமையாக நடித்துள்ளார்கள். அட்லி, உங்கள் கையில் வெற்றிப் படமொன்று உள்ளது எனக் கூறினார்.

சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தாள் படம்போல அந்தகாரம் படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இதற்கான உரிமையைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT