செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம்: டிரெய்லர் வெளியீடு

DIN

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஜூன் 19 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஜூன் 19 அன்று அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். கீர்த்தி சுரேஷின் 24-வது படம் இது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT