செய்திகள்

இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்படும் சுசாந்த் சிங் அறக்கட்டளை!

DIN

இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சுசாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். 

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டாா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா். 

இந்நிலையில் இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சுசாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சுசாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது.

அவருடைய நினைவாக சுசாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம்.

பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும். அவரிடமிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், டெலஸ்கோப் உள்ளிட்ட முக்கியமான பொருள்கள் அனைத்தையும் அந்த வீட்டில் ரசிகர்களின் பார்வைக்காக வைத்திருப்போம். அவருடைய இன்ஸ்டகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை இனிமேல் நாங்கள் நிர்வகிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT