செய்திகள்

ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள லக்‌ஷ்மி பாம் ஹிந்திப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது!

DIN

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

2011-ல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் ஹிந்திப் படமாக உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் - அக்‌ஷய் குமார் முதல்முறையாக இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்தப் படம் மே 22 அன்று வெளிவருவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT