செய்திகள்

ஞாயிறன்று பாடல் வெளியீடு: விஜய்யின் ‘மாஸ்டர்’ இணை தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை!

எழில்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா். நடிகா் விஜயை அவரது பனையூா் பங்களாவுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். பிறகு நடிகா் விஜய்யின் ஆடிட்டா் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவில் ஆஜரானாா். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பிகில் பட ஒப்பந்தம் பற்றி அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட ஏஜிஎஸ் குழும நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள். 

இதனையடுத்து மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் தற்போது வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று மாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வியாபாரம் குறித்து லலித் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வரும் ஞாயிறன்று மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிற சூழலில் இந்த வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள்.

லலித் குமார்
மாஸ்டர் படக்குழுவினருடன் லலித் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT