செய்திகள்

கரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால்...: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்

DIN

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன்.

மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகாததால் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரும் ட்வீட் செய்துள்ளார்கள். மேலும் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்த கரோனா வைரஸ் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஜகமே தந்திரம் படம் வெளியாகியிருக்கும். ஜகம் குணமான பிறகு விரைவில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார். தனுஷும் இதை தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT