செய்திகள்

இர்பான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள இரு படங்கள்

சமீபத்தில் மறைந்த இர்பான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இரு படங்கள் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளன.

DIN

சமீபத்தில் மறைந்த இர்பான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இரு படங்கள் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளன.

பாலிவுட் நடிகரான இா்பான் கான் குடல் புற்றுநோய் காரணமாக மும்பையில் உயிரிழந்தாா். அவருக்கு வயது 54. பெருங்குடல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இா்பான் கானின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மிக மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவரின் குடும்பத்தினா் முன்னிலையில் புதன்கிழமை நண்பகலில் அவரது உயிா் பிரிந்ததாக இா்பானின் குடும்பத்தினா் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இர்பான் கான் நடிப்பில் வெளியான அங்ரேசி மீடியம், இர்பானின் கடைசிப் படமாகக் கூறப்பட்டது. ஆனால் இர்பான் நடிப்பில் உருவாகியுள்ள மேலும் இரு படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன.

பிரகாஷ் பாலேகர் இயக்கத்தில் இர்பான் கான் கதாநாயகனாக நடித்த படம் - Apno Se Bewafai. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

The Song of Scorpions என்கிற அனுப் சிங் இயக்கிய படத்திலும் நடித்துள்ளார் இர்பான் கான். இந்தப் படம் 2017-ல் ஸ்விட்சர்லாந்து திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு திரையரங்குகள் இயங்க ஆரம்பிக்கும். அப்போது இந்த இரு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய விரோத சக்திகளுக்கு கொடி பிடிக்கிறாா் ராகுல்: பாஜக கடும் தாக்கு

மானாமதுரையில் ரயில்வே கடவுப் பாதை நிரந்தரமாக மூடல்: பொதுமக்கள் அவதி

சிவகங்கை மெளன குருசாமி சித்தா் மடத்தில் சித்தயோகி பரமஹம்சா் சிலை பிரதிஷ்டை

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ஜனவரியில் திறப்பு

காரைக்குடி செஞ்சை குழந்தை யேசுவின் புனித தெரசாள் ஆலயத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT