செய்திகள்

மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் நடிக்க விஜய் எப்படி ஒப்புக்கொண்டார்?: டப்பிங் கலைஞர் ரவீணா ரவி ஆச்சர்யம்

மாஸ்டர் படமே வித்தியாசமானதுதான். வழக்கமான மசாலா பொழுதுபோக்குப் படமல்ல.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகி மாளவிகாவுக்கு ரவீணா ரவி டப்பிங் குரல் அளித்துள்ளார்.

சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் ரவீணா கூறியதாவது:

பெரிய படமோ சிறிய படமோ எங்களுக்கு வேலை எல்லாம் ஒன்றுதான். டப்பிங் பணிகள் நடைபெறுவதில் மட்டும்தான் வித்தியாசம் இருக்கும். (பெரிய படம் என்றால் பிரபலத்தின் நேரத்துக்கு ஏற்றாற்போல டப்பிங் பணிகள் நடைபெறும். சிறிய படங்களின் டப்பிங் பணிகள் ஒரே நாளில் முடிந்துவிடும்.) பெரிய படங்களுக்கு டப்பிங் செய்தால் அது பலரையும் சென்றடையும். மாஸ்டர் படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் மாளவிகாவுக்கு நான் டப்பிங் கொடுத்தது ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது.

மாஸ்டர் படமே வித்தியாசமானதுதான். வழக்கமான மசாலா பொழுதுபோக்குப் படமல்ல. சில காட்சிகள் நடிக்க விஜய் எப்படி ஒப்புக்கொண்டார் என ஆச்சர்யப்பட்டேன். மாளவிகா மலையாள உச்சரிப்புடன் பேசியிருந்தார். நான் டப்பிங் செய்யும்போது அதேபோல முதலில் பேச வந்தது, இதற்கு மாளவிகாவையே பேச வைத்திருக்கலாமே எனச் சொன்னார்கள். பிறகு சரியாகப் பேசிவிட்டேன்.

டப்பிங் கலைஞர்களுக்கு நாம் கூடுதல் விருதுகளை அளிக்க வேண்டும். ஏராளமான பட விருது விழாக்கள் நடைபெற்றாலும் சில விழாக்களில் மட்டும் டப்பிங் கலைஞர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT