செய்திகள்

துப்பாக்கி 2 படம் பற்றி சூசகமாக எதுவும் தெரிவிக்கவில்லை: சந்தோஷ் சிவன் மறுப்பு

துப்பாக்கி 2 படம் பற்றி சூசகமாக எதுவும் தெரிவிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

DIN

துப்பாக்கி 2 படம் பற்றி சூசகமாக எதுவும் தெரிவிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

சர்கார் படத்துக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி 2 படத்துக்காக மீண்டும் இணையவுள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் 2012-ல் வெளியான துப்பாக்கி படம், பெரிய வெற்றியை அடைந்தது. இதன்பிறகு இதே கூட்டணியில் கத்தி, சர்கார் போன்ற படங்கள் வெளிவந்தன.

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 படம் விரைவில் உருவாகவுள்ளதாகச் சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம், துப்பாக்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன். தனது இன்ஸ்டகிராம் பதிவில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டதுதான். இதனால் துப்பாக்கி 2 படத்தின் தகவலை அவர் சூசகமாகத் தெரிவிப்பதாக ரசிகர்கள் உணர்ந்தார்கள். எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை எதுவும் உறுதியில்லை என்றே பலரும் கருதினார்கள்.

இந்நிலையில் துப்பாக்கி 2 படம் பற்றி சூசகமாக எதுவும் தெரிவிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.. ரசிகர் ஒருவர், சந்தோஷ் சிவனின் இன்ஸ்டகிராம் பதிவை வைத்து துப்பாக்கி 2 படம் பற்றி ட்விட்டரில் பதிவு எழுதினார். இதற்கு மறுப்பு தெரிவித்த சந்தோஷ் சிவன், நான் மற்ற படங்களின் புகைப்படங்களையும் தான் வெளியிட்டேன். துப்பாக்கி 2 படம் பற்றி சூசகமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

SCROLL FOR NEXT