செய்திகள்

ஆர். பால்கியின் அடுத்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்யும் பி.சி. ஸ்ரீராம்

பால்கி இதுவரை எடுத்த ஐந்து படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த பி.சி. ஸ்ரீராம் தான் பால்கியின் அடுத்த படத்துக்கும்

DIN

சீனி கம், பா, ஷமிதாப், கி அண்ட் கா, பேட்மேன் ஆகிய ஹிந்திப் படங்களை எடுத்த தமிழரான ஆர். பால்கி, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.

பால்கி இதுவரை எடுத்த ஐந்து படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த பி.சி. ஸ்ரீராம் தான் பால்கியின் அடுத்த படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றும் 6-வது படம் இது.

ஃபேஸ்டைமில் பால்கியுடன் விவாதிப்பது தொடர்பான விடியோவை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பி.சி. ஸ்ரீராம்.

கடைசியாக, நித்யா மேனன் நடித்த பிராணா என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார் பி.சி. ஸ்ரீராம். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரங் டே என்கிற தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT