செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: பட வெளியீடு குறித்து சீனு ராமசாமி பதில்

நான்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இசைஞானி இளையராஜா முடித்து விட்டார்...

DIN

இளையராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் எப்போது வெளிவரும் என்பதற்கு அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பதில் அளித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது.

இந்நிலையில் மாமனிதன் படத்தின் வெளியீடு பற்றி சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். யுவன் சங்கர் ராஜா, பாடலுக்கு அரேஞ்ச்மெண்ட்ஸ் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பதைத் தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT