செய்திகள்

மூக்குத்தி அம்மன் படத்தில் பாடியுள்ள எல்.ஆர். ஈஸ்வரி: ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு

நீண்ட நாள் கழித்து திரைப்படம் ஒன்றில் பின்னணிப் பாடலைப் பாடியுள்ள எல்.ஆர். ஈஸ்வரியைக் குறிப்பிட்டு...

DIN

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 14 அன்று மூக்குத்தி அம்மன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மன் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. மூக்குத்தி அம்மனுக்குப் பொங்க வைப்போம் என்கிற இந்தப் பாடலை மூத்த பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பாடியிருந்தார். இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன், பாடல் - பா. விஜய்.

நீண்ட நாள் கழித்து திரைப்படம் ஒன்றில் பின்னணிப் பாடலைப் பாடியுள்ள எல்.ஆர். ஈஸ்வரியைக் குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது

எல்.ஆர். ஈஸ்வரி அம்மா மீண்டும் பாட வந்தது ஆச்சர்யப்படுத்தியுள்ளது என்று எழுதியுள்ளார்.

கடைசியாக, ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி படத்தில் எல்.ஆர். ஈஸ்வரி பாடியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT