முகப்பு
செய்திகள்

அஞ்சான் படத்தில் நடித்தவர்: ஹிந்தி நடிகர் ஆசிப் பஸ்ரா தற்கொலை

காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
படம் - asifbasra.com
பகிர்:

பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 53.

1998-ல் வோஹ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா - பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா - லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஆசிப் பஸ்ரா. இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆசிப் பஸ்ராவின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.