படம் - பிடிஐ 
செய்திகள்

பிரபல வங்காள நடிகருக்கு கரோனா பாதிப்பு!

பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

DIN

பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குநர் சத்யஜித் ரேயின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவருடன் 14 படங்களில் இணைந்து பணியாற்றிவர் செளமித்ர சாட்டர்ஜி. மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 

85 வயது செளமித்ர சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை பெற்றுள்ளார். பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

கரோனா அறிகுறிகள் இருந்ததால் செளமித்ர சாட்டர்ஜிக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT