செய்திகள்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் நடிக்கும் ஜீவா

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் 91-வது படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

DIN

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் 91-வது படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

2011-ல் வெளியான ரெளத்திரம் படத்துக்குப் பிறகு தனது தந்தை ஆர்.பி. செளத்ரியின் படத்தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸில் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்தார் நடிகர் ஜீவா. 

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்தோஷ் ராஜன் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரயாகா நாக்ரா, விடிவி கணேஷ் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவோம்: சுதா எம்.பி.

அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

SCROLL FOR NEXT