செய்திகள்

பரிசுப் பணத்தில் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரியா?: போட்டியாளரைக் கண்டித்த அமிதாப் பச்சன்

பரிசுத்தொகையைக் கொண்டு மனைவியின் முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவுள்ளதாகவும்...

DIN

சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி கடந்த மாதம் ஆரம்பித்தது. கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் மீண்டும் தொகுத்து வழங்குகிறார். இந்த வருட நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து கலந்துகொண்டு வருகிறார் அமிதாப். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் பிபிஇ கிட் எனப்படும் முழுப் பாதுகாப்பு கவச உடைகளைப் பயன்படுத்தி வருகிறாா்கள். கோன் பனேகா குரோர்பதி படப்பிடிப்பிலும் பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து அனைவரும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் கோஷ்லேந்திரா சிங் தோமர், ரூ. 40,000 பரிசுத்தொகை வென்றார். இந்தப் பரிசுத்தொகையைக் கொண்டு மனைவியின் முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவுள்ளதாகவும் கடந்த 15 வருடங்களாக ஒரே முகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். 

தோமரின் இந்தப் பதிலால் அமிதாப் பச்சன் அதிர்ச்சியடைந்தார். இதனால் நெருக்கடிக்கு ஆளான போட்டியாளர், தான் விளையாட்டாக இதைச் சொன்னதாகக் கூறினார். எனினும் அவருடைய அந்தப் பதில் அமிதாப் பச்சனைத் திருப்திப்படுத்தவில்லை. விளையாட்டாகக் கூட நீங்கள் இதுபோலக் கூறக்கூடாது என அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT