செய்திகள்

தமிழில் டப் செய்யப்பட்டுள்ள சுஷ்மிதா சென் நடித்த இணையத் தொடர்!

கடந்த ஜூன் மாதம் இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.

DIN

பிரபல நடிகை சுஷ்மிதா சென் நடிப்பில் ராம் மாத்வனி இயக்கியுள்ள இணையத் தொடர் - ஆர்யா.

கடந்த ஜூன் மாதம் இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில் இப்போது ஆர்யா தொடர் தமிழ், மராத்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி இயக்குநர் ராம் மாத்வனி கூறியதாவது:

பல்வேறு மொழிகள் கொண்ட நம் நாட்டில் எங்கள் கதையை ஆறு மொழிகளில் வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கதையுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொண்டு ஆர்யா தொடரை ரசிப்பார்கள் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார். 

1996 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் சுஷ்மிதா சென், 2010-ல் நோ பிராப்ளம் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்தார். அதன்பிறகு 2015-ல் நிர்பாக் என்கிற வங்காளப் படத்தில் நடித்தார். 5 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் நடித்தது தான் ஆர்யா இணையத் தொடர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT