செய்திகள்

கோவா திரைப்பட விழா ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு

நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த கோவா திரைப்பட விழா, அடுத்த வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN


நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த கோவா திரைப்பட விழா, அடுத்த வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சா்வதேசத் தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கோவா திரைப்பட விழா நடைபெறும். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட கோவா திரைப்பட விழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். 2021 ஜனவரி 16 முதல் 24 வரை நேரடியாகவும் இணையம் வழியாகவும் இந்த விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT