கரோனா ஊரடங்கால் கபடதாரி படத்துக்கு மட்டும் ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.
கவலுதாரி என்கிற கன்னடப் படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசை - சைமன் கே கிங்.
கபடதாரி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
பல்வேறு காரணங்களுக்காக 200 நாள்கள் காத்திருந்த பிறகு கபடதாரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பல சவால்களைச் சந்தித்துள்ளோம். தாமதத்தால் ரூ. 1 கோடி இழப்பு இப்படத்துக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது. எனில் ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள் என்றார்.