விஜய் சேதுபதி (கோப்புப் படம்) 
செய்திகள்

சாதி, மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு: விஜய் சேதுபதி

சாதி, மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது நான் 2019-ல் சொன்னது.

DIN

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை முதல் திரையுலகப் பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். 

கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய் சேதுபதி. பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சாதி, மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறினீர்களே என செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது:

சாதி, மதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது நான் 2019-ல் சொன்னது. எப்போதும் அதுதான் என் நிலைப்பாடு. என்னைப் பொறுத்தவரை மனிதன் தான் முக்கியம். மனிதன் தான் எல்லாமே என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT