செய்திகள்

விடியோ: 10-வது திருமண நாளுக்காக சன்னி லியோனுக்கு வைர நகையைப் பரிசளித்த கணவர்!

நடிகை சன்னி லியோனுக்கு அவருடைய கணவர் வைர நகையைப் பரிசாக அளித்துள்ளார். 

DIN

10-வது திருமண நாளுக்காக நடிகை சன்னி லியோனுக்கு அவருடைய கணவர் வைர நகையைப் பரிசாக அளித்துள்ளார். 

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன், 2012 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். வடகறி, வீரமாதேவி ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரைத் திருமணம் செய்தார் சன்னி லியோன். 2018-ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 2017-ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.

இந்நிலையில் 10-வது திருமண நாளுக்காக சன்னி லியோனுக்கு அவருடைய கணவர் வைர நகையைப் பரிசளித்துள்ளதாக இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் சன்னி லியோன். அவர் கூறியதாவது:

இது கனவாக உள்ளது. இருவரும் 10 வருடங்கள் திருமண வாழ்க்கையிலும் 13 வருடங்கள் ஒன்றாகவும் இருந்துள்ளோம். அற்புதமான வாழ்க்கை பற்றிய ஒரு உரையாடல் இவ்வளவு தூரம் வரும் என யார் நினைத்துப் பார்த்திருக்க முடியும் எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT