செய்திகள்

நடிகர் விஷ்ணு விஷால் - பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா திருமணத் தேதி அறிவிப்பு

விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்.

DIN

பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை ஏப்ரல் 22-ல் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். 2017-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 2018 நவம்பரில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். ஜுவாலா குட்டா, பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தைத் திருமணம் செய்து, 2011-ல் விவாகரத்து செய்தார்.

விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். கடந்த வருடம் செப்டம்பர் 7 அன்று இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயமானதை உறுதி செய்தார்கள். இந்நிலையில் திருமணத் தேதியை இன்று அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

ஏப்ரல் 22 அன்று நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்யவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: துரை வைகோ எம்.பி.

வேலூா் புத்தகத் திருவிழா: இன்று சிறப்பு பட்டிமன்றம்

தக்கலையில் இளைஞா் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி போராட்டம்

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT