செய்திகள்

பரியேறும் பெருமாள் மசாலா படம்: இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்

பரியேறும் பெருமாள் கிளாசிக் படமாக இருந்தாலும் அதிலும் பாடல்கள் உள்ளன,

DIN

பரியேறும் பெருமாள், மண்டேலா படங்களிலும் மசாலாக் காட்சிகள் உள்ளன என இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கூறியுள்ளார். 

இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியானது. 

இந்நிலையில் சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் தளத்துக்கு பேட்டியளித்தார் கே.எஸ். ரவிகுமார். மசாலா படங்களுக்கான முக்கியத்துவம் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:

மண்டேலா படத்திலும் மசாலா உள்ளது. சிரிக்க வைக்கக் கூடிய காட்சிகள் உள்ளன. மசாலா இல்லாத படங்கள் இல்லை. பரியேறும் பெருமாள் கிளாசிக் படமாக இருந்தாலும் அதிலும் பாடல்கள் உள்ளன, நகைச்சுவை உள்ளது, திரைக்கதையைச் சுவாரசியமாக்க சில விஷயங்கள் சேர்ப்பதை நீங்கள் மசாலா என்கிறீர்கள். மசாலா அதிகமாக உள்ள படங்களை மசாலா படங்கள் என்கிறீர்கள். அதெல்லாம் மசாலாவே இல்லாத படங்கள் இல்லை. கிளாஸ் படங்களிலும் மசாலாக்கள் உள்ளன. கொஞ்சம் அளவோடு இருக்கும். இதில் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும். 

மாஸ் படங்களை ரசிப்பவர்கள் அதிகமாக உள்ளார்கள். எல்லா வகைப் படங்களும் வரவேண்டும். இல்லையென்றால் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். பரியேறும் பெருமாள் வித்தியாசமாகத் தெரிந்து பாராட்டுகிறார்கள் என்றால் கமர்ஷியல் படங்கள் இருந்தால் தான் அதற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கும். எல்லாப் படங்களும் பரியேறும் பெருமாளாகவும் இருந்தாலும் சுவாரசியம் இல்லாமல் போய்விடும். 10 மசாலா படங்களுக்கு மத்தியில் வரும்போதுதான் அது தனித்து நிற்கும். எல்லாமே பரியேறும் பெருமாளாக வந்துவிட்டால் அது தனித்து நிற்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT