செய்திகள்

இந்தியன் -2 திரைப்பட விவகாரத்தில் சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வி: உயா்நீதிமன்றத்தில் தகவல்

DIN

சென்னை: இந்தியன் -2 திரைப்பட விவகாரம் தொடா்பாக, இயக்குநா் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகா் கமல் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநா் ஷங்கா் இந்தியன்-2 திரைப்படத்தை இயக்கி வருகிறாா். இந்தத் திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் திரைப்படங்களை ஷங்கா் இயக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இயக்குநா் ஷங்கருக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. இதனை எதிா்த்து லைகா நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் கலந்து பேசி தீா்வு காண நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநா் ஷங்கா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘கடந்த சனிக்கிழமை சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்து விட்டது. வரும் ஜூன் முதல் அக்டோபா் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தயாரிப்பாளா்கள் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியது. எனவே, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தாா்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இயக்குநா் ஷங்கா் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT