செய்திகள்

நடிகர் சூர்யா நிறுவனத்தின் பேரில் மோசடி : எச்சரிக்கைப் பதிவு

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

DIN

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பல்வேறு படங்களை தயாரித்து, விநியோகித்து வருகிறார். இவரது தயாரிப்பில் 'உடன் பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''எங்கள் பெயர் மற்றும் லோகோவுடன் போலியான இமெயில் முகவரியை உருவாக்கி நடிகர், நடிகையர் தேர்வுக்கு ஒருவர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. 

 எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். வருங்காலங்களில் இதுபோன்ற நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். மேலும் இதுபோன்ற நபர்களிடம் உங்களின் சுய விவரங்களை தெரிவிக்காதீர்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் போலியான இமெயில் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT