செய்திகள்

பா.ரஞ்சித் - யோகி பாபு இணையும் படத்தின் முக்கிய தகவல்

பா.ரஞ்சித் - யோகி பாபு இணையும் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் யோகி பாபு முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு பொம்மை நாயகி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படக்குழுவினருடன் யோகி பாபு கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்துக்கு சுந்தரமூர்த்தி கே இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பாலியல் துன்புறுத்துதலுக்குள்ளான மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதை தான் இந்தப் படம் என்று கூறப்படுகிறது. அப்பாவாக யோகி பாபு நடிக்க, சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி மகளாக நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

SCROLL FOR NEXT