செய்திகள்

டிச.9இல் வெளியாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டிரைலர்

DIN

ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம்,ரணம்,ரௌத்திரம்) படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் இருந்து உயிரே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரேற்பைப் பெற்று வருகிறது. 

இந்தப் படத்தின் முன்னோட்டம் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சில காரணங்களால் முன்னோட்டம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன் நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழில் இந்தப் படத்துக்கு மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார். இந்தப் படம் 'பாகுபலி' போல பெரும் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT