செய்திகள்

மேடையில் ரஹ்மான் குறித்து கமல்ஹாசன் சொன்ன கருத்து: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் ரஹ்மான் குறித்து கமல்ஹாசன் சொன்ன கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள சில நேரங்களில் சில மனிதரக்ள் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அறிமுகம் செய்து பேசினார். 

அப்போது பேசிய அவர், இயக்குநரை எனக்கு தெரியும். நல்ல உழைப்பாளி. குறுகிய காலத்தில் வந்துவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கு தெரியும் இதற்காக அவர் எவ்வளவு நாள் காத்திருந்தார் என்று. 

இசையமைப்பாளர் ரதன் பேசும்போது என்னை எல்லோரும் தெலுங்கு என்று நினைத்துக்கொள்கிறார்கள். நான் தமிழ் தான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். இசைக்கு அந்த பாகுபாடு கிடையாது. அவர்கள் உங்களை, கன்னட, ஹிந்தி பட இசையமைப்பாளர் என்று நினைத்துக் கொள்ளட்டும். 

உங்களுக்கு தைரியம் கொடுத்த ரஹ்மானுக்கு நன்றி. ஏனெனில் அவர் வேறுமாதிரி சொல்லி உங்களை இந்தப் பக்கமே வர விடாமல் செய்திருக்கலாம். எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் ஒரு விஷயத்தை மனதார சொல்வார். அவர் தான் உங்களை இந்த மேடை வரை அழைத்து வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். என்று  பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT