செய்திகள்

போயஸ் கார்டனில் வீடு கட்டுகிறார் தனுஷ்: பூமி பூஜையில் ரஜினி பங்கேற்பு!

DIN

போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டுகிறார் நடிகர் தனுஷ். இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

ரஜினியின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அருகே புதிய வீடு ஒன்றைக் கட்டுகிறார் தனுஷ். போயஸ் கார்டனில் இன்று நடைபெற்ற புதிய இல்ல பூமி பூஜையில் ரஜினி, அவருடைய மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவரவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள தனுஷ், அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரு படங்களில் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படமான தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT