செய்திகள்

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் குறித்து கேள்வி: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

​குரூப் -1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டதையடுத்து, அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

DIN


குரூப் -1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டதையடுத்து, அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

"தலைசிறந்த படைப்பான "பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் / கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்" இதுவே குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி. 

அதில் ஒரு கூற்றாக "இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது" என்பது இடம்பெற்றிருந்தது.

இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுபற்றி சமூக ஊடகங்களில் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி. யாவருக்கும் நன்றி."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT