செய்திகள்

3-வது குழந்தைக்குத் தந்தையானார் இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

இயக்குநர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல இயக்குநர் செல்வராகவன், 2011-ல் கீதாஞ்சலியைத் திருமணம் செய்தார். 2012-ல் லீலாவதி என்கிற மகளும் 2013-ல் ஓம்கார் என்கிற மகனும் பிறந்தார்கள். மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தை கீதாஞ்சலி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் 3-வது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். குழந்தைக்கு ரிஷிகேஷ் எனப் பெயரிட்டுள்ளதாக இன்ஸ்டகிராமில் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். குழந்தை நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா. இப்படத்தின் புகைப்படப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை செல்வராகவனும் தாணுவும் வெளியிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT